கன மழையினால் 3 குடிசை வீடுகளின் மண் சுவர் இடிந்து விழுந்து சேதம்

கன மழையினால் 3 குடிசை வீடுகளின் மண் சுவர் இடிந்து விழுந்து சேதம்
X

மழையால் சேதமடைந்த வீடு

பாபநாசம் பகுதியில் பெய்த கன மழையினால் 3 குடிசை வீடுகளின் மண் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது.

பாபநாசம் தாலுக்கா ராஜகிரி ஊராட்சியில் அண்ணா தெருவில் வசித்து வருபவர் மல்லிகா (44). இவரது மண் சுவர் கொண்ட கூரைவீடு சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஈரப்பதம் தாங்காமல் இடிந்து விழுந்து விட்டது.

இதேபோல் சரபோஜிராஜபுரம் ஊராட்சியில் மட்டகாரர் தெருவில் வசித்து வருபவர் பார்வதி (50). இவரது கல் மண் சுவர் கொண்ட தகர சீட்டு கூரைவீடு சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக வீட்டின் சுவர் முற்றிலும் இடிந்து விழுந்துவிட்டது.

இதேபோல் பாபநாசம் தாலுக்கா மட்டையாந்திடல் கிராமத்தில் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் கண்ணம்மாள் (66).இவரது மண் சுவர் கொண்ட கூரைவீடு சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஈரப்பதம் தாங்காமல் மண் சுவர் இடிந்து விழுந்துவிட்டது.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் பாதிக்கப்பட்டவர்கள் விவரங்களை வருவாய் ஆய்வாளர் மூலம் பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனனுக்கு அறிக்கையாக தகவல் தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!