தஞ்சையில் கொரோனா பாதித்த பள்ளி கலெக்டர் ஆய்வு

தஞ்சையில் கொரோனா பாதித்த பள்ளி கலெக்டர் ஆய்வு
X
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் கொரோனாவால் பாதித்த அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெறும் சுகாதார பணிகளை மாவட்ட கலெக்டர் கோவிந்த ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியான ரெஜினா சேலி பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தற்போது 5ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாணவி ஒருவருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அந்த மாணவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் பள்ளியில் பயிலும் மேலும் 460 மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அதில் 20 மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பள்ளிக்கு இரண்டு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டது.

பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினித் அளிக்கும் பணியை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டனர். இந்நிலையில் மேலும் 619 மாணவிகள் மற்றும் 35 ஆசிரியர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 35 மாணவிகளும், ஒரு ஆசிரியருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பள்ளியில் படித்த 55 மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், பெற்றோர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் மாணவ. மாணவிகளின் பெற்றோர்களுக்கும் பரிசோதனை செய்ய சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பள்ளியில் மேற்கொண்டுவரும் நடவடிக்கையை கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!