பாபநாசத்தில் குறிஞ்சி இனமக்கள் எழுச்சி கழக மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பாபநாசத்தில் குறிஞ்சி இனமக்கள் எழுச்சி கழக மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
X
மாவட்டம் தோறும் பழங்குடி மலைக்குறவர் மக்களை கணக்கெடுத்து ஜாதி சான்றிதழ், இலவச வீட்டுமனை உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும்

பாபநாசம் கட்சி அலுவலகத்தில் குறிஞ்சி இனமக்கள் எழுச்சி கழகத்தின் மாநில பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் வழக்கறிஞர் உத்தமகுமரன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநில இணைச்செயலாளர் நீலமேகம், மாநில செயலாளர் வெங்கடேசன், மாநில ஒருங்கிணைப்பாளர் தத்தூர் தங்கராசு, மாநில அவைத்தலைவர் சிகாமணி, மாநில துணை ஒருங்கிணைப்பாளர் ஆலம்பாடி ராஜேந்திரன், தஞ்சை வடக்கு மாவட்ட துணை தலைவர் மாத்தூர் வெங்கடேசன், பொருளாளர் திருவைகாவூர் திருமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில், மாவட்டம் தோறும் பழங்குடி மலைக்குறவர் மக்களை முறையாக கணக்கெடுத்து ஜாதி சான்றிதழ், இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை முழுமையாக வழங்க வேண்டும். ஒவ்வொரு தாலுகாவிலும் விடுபடாமல் பழங்குடி மலைக்குறவர் குடும்பத்தைச் சேர்ந்த படித்த மாணவ மாணவிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story