வெறும் காட்சிப் பொருளாக இருக்கும் நாயக்கர் பேட்டை சமுதாயக்கூடம்

வெறும் காட்சிப் பொருளாக இருக்கும் நாயக்கர் பேட்டை சமுதாயக்கூடம்
X

பயன்பாடின்றி காட்சிப் பொருளாக உள்ள சமுதாயக்கூடம். 

கோவிந்தநாட்டுச்சேரியை அடுத்த நாயக்கர் பேட்டை சமுதாயக்கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பகுதி கோவிந்தநாட்டுச்சேரியை அடுத்த நாயக்கர் பேட்டை கிராமத்தில் பொதுமக்கள் நலன் கருதி சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. ஆனால், சமுதாயக்கூடம் கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக, சமுதாயக்கூடம் காட்சி பொருளாகவே இருக்கிறது. இதனால் மக்கள் வரிப்பணம் விரயமாகிறது.

எனவே சமுதாயக்கூடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!