பாபநாசம் அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை

பாபநாசம் அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
X

பைல் படம்

பாபநாசம் அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பாபநாசம் அருகே தெற்கு நாயக்கன் பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர் மோகன் (42) இவரது மகன் அஜய் சர்மா (20). இவர் தஞ்சையிலுள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் இஇஇ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் அஜய் சர்மா கல்லூரிக்கு செல்லாமல் நண்பர்களுடன் சுற்றித் திரிவதை அவருடைய பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த கல்லூரி மாணவர் அஜய் சர்மா வயலுக்கு வைத்திருந்த விஷ பூச்சி மருந்தை சாப்பிட்டு விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பாபநாசம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை மோகன் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் பொறுப்பு இன்ஸ்பெக்டர் பகவதி சரணம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!