பாபநாசம் ஆர்.டி.பி கல்லூரியில் 'உன்னுள் ஆளுமை' கருத்தரங்கம்

பாபநாசம் ஆர்.டி.பி கல்லூரியில்  உன்னுள் ஆளுமை கருத்தரங்கம்
X

ஆர்.டி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கு.

பாபநாசம் ஆர்.டி.பி கல்லூரியில், உன்னுள் ஆளுமை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கும்பகோணம் அருகே, பாபநாசத்தில் உள்ள ஆர்.டி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மேலாண்மை துறை சார்பில், 'உன்னுள் ஆளுமை' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு ஆர்.டி.பி கல்வி குழும இயக்குநர் காரல்மார்க்ஸ் தலைமை வகித்தார். கல்வி துணை முதல்வர் தங்கமலர், கல்வியல் கல்லூரி முதல்வர் விமலா முன்னிலை வகித்தனர். மேளாண்மைத்துறை தலைவர் சசிக்குமார் வரவேற்றார்.

பட்டிமன்ற நடுவர் அண்ணா சிங்கார வேலு, தஞ்சாவூர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மண்டல மேலாளர் ஆல்வின் மார்டின் ஜோசப் ஆல்பர்ட் சிறப்புரையாற்றினார். இதில் ஆர்.டி.பி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் லதா மோகன், நர்சிங் கல்லூரி கலையரசி உள்பட பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மேலாண்மைத் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture