பாபநாசம் பேரூராட்சியில் தஞ்சை கலெக்டர் திடீர் ஆய்வு

பாபநாசம் பேரூராட்சி பகுதியில், கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
பாபநாசம் பேரூராட்சி அரயபுரம் கிராமத்தில் அமைந்துள்ள மனைபிரிவு பகுதிகளில், தஞ்சை கலெக்டர் தளவமைப்பு புல தணிக்கையினை, திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதுசமயம் அருகில் விவசாயிகளுக்கு கடைமடை பகுதி வரை பாசன வாய்க்கால் வசதி செய்யப்பட்டுள்ளதா எனவும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அப்பகுதியில் பொதுமக்களிடம் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் எனவும், கொரோனா வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். ஆய்வின்போது பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன், பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், வருவாய் ஆய்வாளர் வரதராஜன், வட்ட துணை ஆய்வாளர் பிரசாத், வட்ட சார் ஆய்வாளர் பாலமுருகன், கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன், சுகாதார ஆய்வாளர் பரமசிவம், சுகாதார மேற்பார்வையாளர் நித்யானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu