பாபநாசம் பகுதியில் 3 இடங்களில் 7 1/4 பவுன் திருடிய சகோதரர்கள் கைது

பாபநாசம் பகுதியில் 3 இடங்களில் 7 1/4 பவுன் திருடிய  சகோதரர்கள் கைது
X

(பைல் படம்)

பாபநாசம் பகுதியில் 3 இடங்களில் 7 1/4 பவுன் திருடிய சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மெலட்டூர் அருகே குண்டூர் கிராமத்தில் ராணுவ வீரர்கள் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 40 பவுன் திருடிய வழக்கில், மதுரை, தெப்பக்குள ரோடு, சிந்தாமணி தெருவைச் சேர்ந்த சக்திவேல் (31) இவரது தம்பி சிவா (30) ஆகிய இருவரையும் மெலட்டூர் போலீசார் கைது செய்து 40 பவுன் நகை பறிமுதல் செய்து தஞ்சை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புதுக்கோட்டை கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் பாபநாசம், இடையிருப்பு, கோபுராஜபுரம் ஆகிய மூன்று இடங்களில் 7 1/4 கால் பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்.

போலீஸ் விசாரணையில் பாபநாசம் பகுதியில் மூன்று இடங்களிலும் ஏற்கனவே மெலட்டூரில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதுரையைச் சேர்ந்த சகோதரர்களான சக்திவேல், சிவா என்பது தெரியவந்தது.

பின்னர் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி புதுக்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த சக்திவேல், சிவா ஆகிய இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து அவர்களிடமிருந்து பாபநாசம் பகுதியில் மூன்று இடங்களில் திருடிய 7 1/4 கால் பவுன் நகைகளை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து இருவரையும் பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மாஜிஸ்ட்ரேட் சிவகுமார், நகையை திருடிய சகோதரர்களான சக்திவேல், சிவா ஆகிய இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் சக்திவேல், சிவா இருவரும் மீண்டும் புதுக்கோட்டை கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!