தமிழக எம்பி க்களை சந்திக்க அமித்ஷா மறுப்பு: ஜவாஹிருல்லா எம்எல்ஏ கண்டனம்

தமிழக  எம்பி க்களை  சந்திக்க அமித்ஷா மறுப்பு: ஜவாஹிருல்லா எம்எல்ஏ கண்டனம்
X
இதன் மூலம் ஒட்டு மொத்தத் தமிழக மக்களையே ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவமதித்துள்ளார்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 11 அன்று நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தி வருகின்றார். இச்சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முறையிடத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி. ஆர். பாலு தலைமையில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரம் ஒதுக்குமாறு கேட்டுள்ளனர்.

தலைநகர் தில்லியில் இருந்த நிலையில் ஒன்பது நாட்கள் கடந்த பிறகும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க மறுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக மக்களின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க மறுத்திருப்பதின் மூலம் ஒட்டு மொத்தத் தமிழக மக்களையே ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவமதித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தின் மசோதாவைக் குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பதவி விலக வேண்டுமெனவும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் காக்க வைத்து அவமதித்துள்ள அமித்சா மன்னிப்பு கேட்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!