பாபநாசத்தில் அமமுக கொடியேற்று விழா: டிடிவி தினகரன் பங்கேற்பு

பாபநாசத்தில் அமமுக கொடியேற்று விழா: டிடிவி தினகரன் பங்கேற்பு
X

அய்யம்பேட்டை பேரூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கொடியேற்று விழா தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது.

அய்யம்பேட்டை பேரூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது.

தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பாபநாசம் தெற்கு ஒன்றியம் அய்யம்பேட்டை பேரூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கொடியேற்று விழா தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது.

விழாவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு பசுபதிகோயில், அய்யம்பேட்டை அண்ணா சிலை, அய்யம்பேட்டை கடைவீதி, மதகடிபஜார், வழுத்தூர் சக்கராப்பள்ளி பண்டாரவாடை இராஜகிரி பாபநாசம் ஆகிய பகுதிகளில் அமமுக கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பாபநாசம் ஒன்றிய செயலாளர்கள் பன்னீர்செல்வம், மகேந்திரன் அய்யம்பேட்டை பேரூர் செயலாளர் சிட்டிபாபு, பாபநாசம் பேரூர் செயலாளர் பிரேம்நாத்பைரன், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணசாமி, பொதுக்குழு உறுப்பினர் சேதுராமன், மாவட்டத் தலைவர் ஜெயராமன் மற்றும் மாநில மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கிளை கழக சார்பில் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!