40 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்

40 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள்  மாணவர்கள்
X

அய்யம்பேட்டை அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு 

அய்யம்பேட்டை அரசு பள்ளியில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பழைய மாணவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு

1979 - 81ம் கல்வியாண்டில் அய்யம்பேட்டை அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்தவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கல்வி, போலீஸ், கூட்டுறவு, தபால் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் குமார் தலைமை தாங்கினார். பள்ளி பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் நவநீதன் முன்னிலை வகித்தார். சென்னை புதுக்கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அப்துல் லத்தீப் அனைவரையும் வரவேற்றார்.

இப்பள்ளியில் 1979 முதல் 81 ஆண்டு வரை 11, 12-ம் வகுப்பில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு பாடம் நடத்திய 95 வயது நிரம்பிய தமிழாசிரியர் அம்பிகாபதிக்கு முன்னாள் மாணவர்கள் பொன்னாடை அணிவித்து, மரியாதை அளித்தனர். தொடர்ந்து கல்வி பயின்ற காலங்களில் நடைபெற்ற சுவாரசியங்களை அவர்கள் நினைவு கூர்ந்தனர்.

தொடர்ந்து பள்ளி வளாகத்தை சுற்றி பார்த்த அவர்கள் தங்கள் படித்த வகுப்பறைகளில் அமர்ந்து செல்பி எடுத்துக்கொண்டனர். மேலும் தங்கள் குடும்பம், குழந்தைகள், வேலை பற்றி ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். நிகழ்ச்சியை ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் மனோகரன், சேகர் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil