பாபநாசம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு அதிமுக அமைப்பு தேர்தல்

பாபநாசம் பேரூராட்சியில்  15 வார்டுகளுக்கு  அதிமுக அமைப்பு தேர்தல்
X

பாபநாசம் பேரூராட்சியில் 15 வார்டு செயலாளர்கள் மற்றும் வார்டு நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான அ.தி.மு.க அமைப்பு தேர்தல் நடைபெற்றது

பாபநாசம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு நடைபெற்ர அதிமுக அமைப்பு தேர்தலில் நிர்வாகிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்

பாபநாசம் பேரூராட்சியில் 15 வார்டு செயலாளர்கள் மற்றும் வார்டு நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான அ.தி.மு.க அமைப்பு தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலை அரியலூர் மாவட்ட செயலாளரும், அரசு தலைமை முன்னாள் கொறாடாவுமான தாமரை ராஜேந்திரன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இளவரசன், தஞ்சை வடக்கு மாவட்ட அவைத்தலைவர் சுப்ரமணியன், டி.பழுர் மேற்கு ஒன்றிய செயலாளர் அசோகன் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாகவும்,பொறுப்பாளர்களாகவும் இருந்து நடத்தினர்.

இத்தேர்தலில் பாபநாசம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கும் அவைத் தலைவர், செயலாளர், இணை செயலாளர், துணை செயலாளர்கள், பொருளாளர் மேலவை பிரதிநிதிகள் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதற்கான வேட்பு மனுக்களை பெற்று தேர்தல் ஆணையரிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் பாபநாசம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஐயப்பன், பாபநாசம் பேரூர் செயலாளர் கோவி.சின்னையன் மற்றும் அனைத்து வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!