பாபநாசம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிற்சி முகாம்

பாபநாசம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிற்சி முகாம்
X

பாபநாசம் அருகே தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிற்சி முகாம் நடந்தது.

பாபநாசம் அருகே சரபோஜிராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சரபோஜிராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில், செங்கிப்பட்டி ஆர்.வி.எஸ் வேளாண்மை கல்லூரி, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி, பான்செக்கர்ஸ் மகளிர் கலைக்கல்லூரியில் பி.காம், பி.எஸ்.சி இளங்கலை வேளாண்மை, இறுதியாண்டு பயிலும் 24 மாணவ மாணவிகளுக்கு வேளாண்மை துறை தொடர்பான பணிகள், செயல்பாடு குறித்தும் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.

ஊராட்சி தலைவர் பூமா சண்முகம் முன்னிலை வகித்தார். முகாமில் சங்க செயலாளர் கலியமூர்த்தி கலந்து கொண்டு வேளாண்மைத் துறைக்கும், வேளாண் பொதுமக்களுக்கும் கூட்டுறவுத் துறையின் மூலம் அளிக்கும் பங்களிப்பு குறித்தும், விவசாய கடன் வழங்குவது, வழிமுறைகள் குறித்தும் சங்கத்தின் பங்களிப்புகள் குறித்தும் விளக்கி பேசினார். ஏற்பாடுகளை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!