/* */

5,000 வாழை மரங்கள் ஒடிந்து சேதம்

தஞ்சையில் நேற்று பெய்த கன மழையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் ஒடிந்து சேதமடைந்தது.

HIGHLIGHTS

5,000 வாழை மரங்கள் ஒடிந்து சேதம்
X

அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 5,000 வாழை மரங்கள் நேற்றிரவு பெய்த மழையால் முற்றிலும் சேதம். ஒரு ரூபாய் கூட லாபம் பார்க்கமால் ஏக்கருக்கு ஒரு லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை.தெரிவித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நேற்று மட்டுமே 9 செ.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக தஞ்சாவூர் அருகே உள்ள குலமங்கலம் பகுதியில் 5 ஏக்கரில் பயிரிடப்பட்ட 5,000 வாழை மரங்கள் பலத்த மழையினால் முற்றிலும் முறிந்து விளைநிலத்தில் விழுந்து உள்ளது.

இதனால் ஏக்கருக்கு ஒரு லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தடை உத்தரவு காரணமாக வாழை விற்பனை மிகப் பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், தற்போது தடை உத்தரவால் விற்பனை இல்லாமல் மரங்களிலே காய்ந்து வருவதாகவும்,

மே 24-ஆம் தேதிக்கு பிறகு விற்பனை செய்யலாம் என்று இருந்த நிலையில் பலத்த மழையால் அனைத்து மரங்களும் முற்றிலும் முறிந்து விட்டதாகவும்கூறுகின்ளனர். அதாவது ஒரு வருட காலமாக முதலீடு செய்து தற்போது லாபம் பார்க்க வேண்டிய நேரத்தில் மரங்கள் அனைத்தும் சேதம் ஆகி விட்டதாகவும், இனிமேல் இந்த மரங்களால் ஒரு ரூபாய் கூட தங்களால் வருவாய் ஈட்ட முடியாது எனவும், மேலும் விழுந்த மரங்களை அப்புறப்படுத்துவதற்கு கூடுதலாக 20,000 ஆயிரம் வரை செலவு ஏற்படும் என வேதனை தெரிவிக்கின்றனர். எனவே நெல் போன்ற பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது போல தங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும்,

ஆனால் வாழை பயிர்களை, தோட்டக்கலை பயிர் என்று இழப்பீடு வழங்கப்படுவதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Updated On: 20 May 2021 11:44 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  9. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!