இளைஞரை கட்டி வைத்து 6 பேர் கொண்ட கும்பல் தாக்குல்
நண்பன் வீட்டில் பணத்தை திருடியதாக கூறி, கண்கனை கட்டி கம்பால் கொடூரமாக தாக்கிய வீடியோ வைரலாக வெளியானதால், மனவேதனை அடைந்த அடிவாங்கிய இளைஞர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் அருகே அம்மாபேட்டை பூண்டி மேலத் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் ராகுல் (22). அதே போல் பக்கத்து ஊரான கோனுர் கிராமத்தைச் சேர்ந்தவர் லெட்சுமணன் இருவரும் நண்பர்கள். இந்நிலையில் கடந்த பிப்.1-ம் தேதி லெட்சுமணன் வீட்டில் இருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை என்று கூறப்படுகிறது. இந்த பணத்தை ராகுல் தான் எடுத்திருக்கலாம் எனக் கருதிய லெட்சுமணன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் ராகுலை அழைத்து விசாரித்துள்ளனர்.
அப்போது ராகுல் பணம் எடுக்கவில்லை எனக் கூறியுள்ளார், ஆனாலும் லெட்சுமணனின் நண்பர்கள் விடாமல் ராகுலின் கண்களை துண்டால் கட்டி கம்பால் கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது ராகுல் நான் எடுக்கவில்லை என கூறி விட்டுவிடுமாறு கெஞ்சி கதறியும் விடாமல் தாக்குகின்றனர். இந்த காட்சிகளை லெட்சுமணனின் நண்பர்களே செல்போன் மூலம் வீடியோவில் பதிவு செய்து அதனை சமூக வளைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த காட்சிகளை பார்த்த ராகுல், திருட்டு பட்டம் சுமத்தியதாலும், வீடியோவில் அடிவாங்குவதை கண்டு மனமுடைந்து நேற்று எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உடனடியாக வீட்டிலிருந்தவர்கள் ராகுலை காப்பாற்றி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இளைஞர் ராகுல் அடிவாங்கும் வீடியோ தற்போது ஊடகங்களிலும், சமூக வளைதங்களிலும் வெளியானதை பார்த்த அம்மாபேட்டை போலீஸார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராகுலிடம் புகாரினை பெற்று, லெட்சுமணனின் நண்பர்கள் கோனூரைச் சேர்ந்த விக்கி (25), விவேக் (24), பார்த்திபன் (25), அய்யப்பன் லெட்சுமணன் (24), சரத் ஆகிய ஆறு பேர் ஆறு பிரிவின் கீழ் அம்மாப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அடிவாங்கிய இளைஞர் ராகுல், லெட்சுமணன் மற்றும் அவரது நண்பர்கள் அப்பகுதியில் உள்ள ஆற்றில் மணல் அள்ளும் கூலி வேலை செய்து வருவதும், இவர்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தினர் என போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu