பாடைக்கட்டி போராட்டம்

பாடைக்கட்டி போராட்டம்
X

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் மாதர் சங்கத்தினர், தபால் நிலையத்தை முற்றுகையிட்டு, இருசக்கர வாகனத்திற்கு பாடைகட்டி, ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நாடு தழுவிய அளவில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் இந்த போராட்டம் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகில் உள்ள அருந்தவபுரம் கிளை அஞ்சலகம் முன்பு, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் பி. தாமரைச்செல்வி தலைமையில், இரு சக்கர வாகனத்திற்க்கு பாடை கட்டி, ஒப்பாரி வைத்து, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி