/* */

மதுக்கூர் விவசாயிகள் 50 பேருக்கு இயற்கை பண்ணைய சுற்றுலா

Today Thanjavur News -மதுக்கூர் விவசாயிகள் 50 பேர் இயற்கை பண்ணையம் குறித்த சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

HIGHLIGHTS

மதுக்கூர் விவசாயிகள் 50 பேருக்கு இயற்கை பண்ணைய சுற்றுலா
X

மதுக்கூர் வட்டாரத்தை சார்ந்த 50 விவசாயிகளை அங்கக பண்ணையம் குறித்த சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.

Today Thanjavur News -தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில், மதுக்கூர் வட்டாரத்தை சார்ந்த 50 விவசாயிகளை அங்கக பண்ணையம் குறித்த சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். ஆம்பலாப்பட்டு வடக்கு கிராமத்தில் உள்ள இயற்கை விவசாயியும், அனைத்து இந்திய விவசாயிகள் சங்க துணை தலைவர் தன்ராஜ் பண்ணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவரது பண்ணையில் தயார் செய்யப்படும் மீன் அமிலத்தினை செயல் விளக்கத்தின் மூலம் விவசாயிகளிடம் நேரடியாக செய்து தன்ராஜ் காண்பித்தார். மீன் அமிலம் தயார் செய்வதற்கு ஒரு கிலோ மத்தி மீன்னிற்கு 250 கிராம் பேரிச்சை, ஒரு கிலோ நாட்டு சர்க்கரை, அரை கிலோ நோனி பழம் இவை மூன்றையும் ஒன்றாக கலந்து 15 நாட்கள் வைத்து, பின்னர் ஒரு கிலோ மத்தி மீன் ,ஒரு கிலோ நாட்டுச் சர்க்கரையுடன் கலந்து 15 நாட்களுக்கு முன்பு தயார் செய்த கலவையுடன் சேர்த்து 48 நாட்கள் கழித்து மீன் அமிலம் பயன்படுத்துவதற்கு தயாராகிறது.

இதனை தென்னை, நெல், காய்கறி பயிர், பயறு வகை பயிர், நிலக்கடலை ஆகியவற்றிற்கு பயன்படுத்தலாம். இதனால் மகசூல் அபரிவிதமாக அதிகரிப்பதாக தன்ராஜ் கூறினார்.

யூரியா கரைசல் தயார் செய்வதற்கு 5 கிலோ நாட்டு மாட்டுச் சாணம் மற்றும் 10 லிட்டர் மாட்டு கோமியம் இவை இரண்டையும் ஒன்றாக கலந்து 48 நாட்கள் வைத்து பின்னர் இதனை உபயோகிப்பதால் யூரியா பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க முடியும் என்று கூறினார்.

இவரிடம் இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் நோனி பானம் உள்ளது. இதில் அதிகப்படியான புரதம், தாது உப்புக்கள், விட்டமின் சி ஆகியவை உள்ளதாகவும் இதனை மத்திய உணவு பரிசோதனை மையத்தின் மூலம் அறிந்து கொண்டதாகவும் கூறினார்.

இதனை தினமும் எடுத்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுவதாகவும், மன அழுத்தம், சர்க்கரை நோய், உடல் எடை ஆகியவற்றை சமநிலையில் வைப்பதாகவும் கூறினார். மேலும் இவர் பஞ்சகாவியம், இயற்கை பூச்சி விரட்டி, ஊட்டம் ஏற்றிய தொழு உரம், ஆர்கானிக் கேக் மற்றும் செக்கு தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை தயார் செய்து வருகிறார்.

இனிவரும் காலங்களில் இளைய தலைமுறைகளுக்கு இயற்கையான முறையில் உணவு வழங்க வேண்டும் என்பதை எனது குறிக்கோள் எனவும் விவசாயிகளிடம் அவர்களது அனுபவத்தினை பகிர்ந்து கொண்டார். பயிற்சி நிறைவாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் சி.சுகிதா நன்றி கூறினார்.

சுற்றுலாவிற்கான ஏற்பாட்டினை வேளாண்மை உதவி அலுவலர் பூமிநாதன், ஜெரால்டு, சுரேஷ் தினேஷ், முருகேஷ் உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜு மற்றும் அய்யாமணி ஆகியோர் செய்திருந்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 27 Oct 2022 10:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க