தஞ்சை அருகே முறையற்ற காதல் விவகாரத்தில் இளைஞர் அடித்து கொலை

தஞ்சை அருகே முறையற்ற காதல் விவகாரத்தில் இளைஞர் அடித்து கொலை
X

கொலை செய்யப்பட்ட ஆனந்த்.

தஞ்சை அருகே முறையற்ற காதல் விவகாரத்தில் இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் அருகே வாளமர் கோட்டை பகுதி வாண்டையார் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகன் ஆனந்த் (21). இவர் ஐ.டி.ஐ. படித்துள்ளார். இந்த நிலையில் ஆனந்த் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த மாணவி தங்கை முறை என்பதால் இரு வீட்டாரும் கண்டித்துள்ளனர். ஆனால் ஆனந்த் தனது காதலை விடவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் சூரக்கோட்டையை பகுதியை சேர்ந்த மாணவியின் அத்தை மகனான உதயகுமார் (25) இது குறித்து கண்டித்துள்ளார். இப்பிரச்சிணை தொடர்பாக நேற்று இரவு வாளமர்கோட்டை கல்லணை கால்வாய் கிளை வாய்க்காலில் நின்று கொண்டிருந்த போது உதயகுமார் என் அத்தை மகளை நீ காதலிக்க கூடாது. அவளை விட்டு விலகி விடு என ஆனந்திடம் கூறினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த உதயகுமார் மண்வெட்டியால் ஆனந்தின் பின் தலை மற்றும் முகத்தை சிதைத்தும் கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலே ஆனந்த் உயிரிழந்துவிட்டார். தகவலறிந்த தாலுகா காவல்துறையினர் ஆனந்தின் கைப்பற்றி தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய உதயகுமாரை தேடி வருகின்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!