மலேசியாவில் கொத்தடிமையாக நடத்தப்படும் கணவரை மீட்டு தர மனைவி கோரிக்கை

மலேசியாவில் கொத்தடிமையாக நடத்தப்படும் கணவரை மீட்டு தர மனைவி கோரிக்கை
X

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த வெட்டுவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம்,44, இவருக்கு அமராவதி என்ற மனைவியும், 6ம் வகுப்பு படிக்கும் மகன் ஆதித்யன், 9ம் வகுப்பு படிக்கும் பிரியதர்ஷினி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பாக, முருகானந்தம் மலேசியாவிற்கு ஹோட்டலில் வேலை என அழைத்து செல்லப்பட்டார்.

தற்போது அவருக்கு உடல் நிலை சரியில்லை என கூறி சொந்த ஊருக்கு திரும்ப முருகனாந்தம் முடிவு செய்து நிர்வாகத்திடம் கூறியுள்ளார். அவர்கள் முருகானந்ததை விட மறுத்து, கொத்தடிமை போல நடத்தி வருவதாக மனைவியிடம் போனில் தெரிவித்துள்ளார். இதையடுத்து முருகானந்தம் மனைவி கணவரை மீட்டு தர வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கம், தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து அமராவதி கூறுகையில், எனது கணவருக்கு ஆரம்பத்தில் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் என அழைத்து சென்றனர். ஆனால் குறைவாக தான் சம்பளம் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக பல முறை நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் அவருக்கு உடல்நிலை சரியல்லாத நிலையில் ஊருக்கு வர முயற்சித்துள்ளார். ஆனால் அவரை ஹோட்டல் நிர்வாகத்தினர் கொத்தடிமையாக நடத்தி வருகின்றனர். இது குறித்து எனது கணவரை வெளிநாட்டிற்கு அனுப்பிய ஏஜென்ட்டான அக்கரை வட்டம் சுப்பிரமணியன் என்பவரிடம் கேட்டால் அவரும் உரிய பதில் அளிக்கவில்லை. எனது கணவர் மிகுந்த சிரமத்தில் இருப்பதாக தெரிகிறது. எனவே எனது கணவரை உடனடியாக மீட்டு ஊருக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் கண்ணீருடன் கோரிக்கை வைக்கின்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!