இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : கோட்டாட்சியர் விசாரணை

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : கோட்டாட்சியர் விசாரணை
X

பைல் படம்

வரதட்சணை கேட்டு தனது மகளை அடித்துக் கொன்று விட்டதாக கவிதாவின் தந்தை புகார் அளித்துள்ளார்

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்தொடர்பாக கோட்டாச்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள பெரியகுடி சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் சேகர். இவருக்கு மூன்று மகள்கள். மூத்த மகள் சங்கீதா என்கின்ற கவிதா (25), என்பவரை, தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள திருமலைக்கோட்டை சேர்ந்த பால்ராஜ் மகன் மணிகண்டன் என்பவருக்கு, கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

மணிகண்டன் திருமணம் செய்து 15 நாட்களில் வெளிநாடு சென்றுவிட்டார். அதன் பிறகு ஒரே ஒருமுறை மட்டும் அவருடைய சகோதரர் திருமணத்திற்காக ஊருக்கு வந்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. மணிகண்டனின் மனைவி கவிதா தன்னை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் இல்லை என்றால், நீங்கள் ஊருக்கு வந்து விடுங்கள் என கேட்டுள்ளார்.

ஆனால் மணிகண்டனின் தாய் ஜெயலட்சுமி, நாத்தனார் மணிமேகலை ஆகியோர் எதற்கு ஊருக்கு அழைக்கிறாய் என்று கவிதாவிடம் தொடர்ந்து சண்டை போட்டு மிரட்டியதாக போனில் சொல்லி கணவரிடம் அழுதாராம். அதன் பிறகு வெள்ளிகிழமை இரவு கணவனிடம் நீண்ட நேரமாக செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கவிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரது வீட்டிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கிருந்து புறப்பட்டு வந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு விரைந்து வந்த போலீஸார் கவிதாவின் உடலை கைப்பற்றி ஓரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தனது மகளை வரதட்சணை கேட்டு தனது மகளை அடித்துக் கொன்று விட்டதாக, கவிதாவின் தந்தை சேகர், பாப்பாநாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வரதட்சனை கொடுமையால் பெண் இறந்த சம்பவத்தை நேரில் தஞ்சை கோட்டாட்சியர் ரஞ்சித் விசாரணை செய்த பின்னர். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். உறவினர்கள் 300க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையை சூழ்ந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் அப்புறப்படுத்தினர்.

Next Story
ai powered agriculture