அரிவாள் வெட்டில் முகம் சிதைந்த பெண்ணுக்கு 4 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை

அரிவாள் வெட்டில் முகம் சிதைந்த பெண்ணுக்கு 4 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை
X

கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர் கண்ணன்.

தஞ்சாவூர் மருத்துவமனையில், அரிவாளால் வெட்டப்பட்டு தாடை சிதைந்த பெண்ணுக்கு 4 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி கிழையூரை சேர்ந்தவர் கண்ணன்,48. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி குமுதவள்ளி,38,. கடந்த 2016ம் ஆண்டு முதல் கணவன் மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதில் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்து வந்தனர். பின்னர், 2019ல் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பிய கணவருடன் பேசி வந்த நிலையில், மீண்டும் கடந்த பத்து நாட்களாக பேசாமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் வழக்கம்போல இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், கண்ணன் அரிவாளால் குமுதவள்ளியின் முகத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் முகம், தாடையில் அரிவாள் வெட்டு ஏற்பட்டு, தடை துண்டானது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தின் குமுதாவை உடனடியாக மீட்டு, இரவு 7 மணிக்கு தஞ்சாவூர் மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமுடன் உள்ளார்.

மருத்துவக்கல்லுாரி முதல்வர் ரவிக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், குமுதவள்ளியை, இரவு 7 மணிக்கு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார். உடனடியாக முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் உரிய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 4 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடந்தது.

அதன்படி, முக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மனோகரன், பொது அறுவை சிகிச்சை நிபுணர் அழகர்சாமி, மயக்க மருந்து நிபுணர் இனியா, காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் கணேஷ்குமார் அடங்கிய குழுவினர், அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

அந்த பெண்ணுக்கு மூச்சு விட சிரமம் ஏற்படும் என்பதால் தொண்டையில் குழாய் பொருத்தி அதன் வழியாக மூச்சு விட நடவடிக்கை மேற்கொண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பழைய நிலைக்கே முகம் வந்து விடும். இருப்பினும் அந்த பெண் தொடர்ந்து மருத்துவமனையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சை மேற்கொண்டு இருந்தால் சுமார் 5 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக செலவு ஏற்பட்டு இருக்கும் என்றார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த ஒரத்தநாடுபோலீசார் அவரது கணவர் கண்ணனை கைது செய்தனர்.

Tags

Next Story
ai marketing future