இழந்த பசுமையை மீட்டெடுக்கும் வகையில், மரக்கன்றுகள் வழங்கும் இளைஞர்கள்.
இழந்த பசுமையை மீட்டெடுக்கும் வகையில், மரக்கன்றுகள் வழங்கும் இளைஞர்கள்.
கடந்த 2018 ஆம் ஆண்டு வீசிய கஜா புயலால் தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்னை, தேக்கு, வேப்பமரம் என லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தது. இந்நிலையில் விழுந்த மரங்களுக்கு பதிலாக புதிய மரங்களை நடும் முயற்சியில் ஆம்பலாப்பட்டு இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஒரத்தநாடு, ஆம்பலாப்பட்டு, பாப்பா நாடு ஆகிய பகுதிகளில் பசுமையை மீட்டெடுக்கும் வகையில், சுமார் ஒரு லட்சம் மரங்களை வளர்க்க திட்டமிட்டு அதற்கான முயற்சியில் கிராம இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் இளைஞர்களின் இந்த முயற்சியை கண்ட சீதனம் தன்னார்வ தொண்டு நிறுவனம், இளைஞர்களோடு இணைந்து தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த ஆம்பலாப்பட்டு கிராமத்தில் வீடு வீடாக சென்று இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருகின்றனர்.
மா, பலா, கொய்யா, நாவல், சப்போட்டா ஆகிய மர கன்றுகளை, ஒவ்வொரு வீட்டிற்கும் நேரிடையாக சென்று வழங்கி, அதனை நட்டு வளர்த்து வரவேண்டும் என அன்பு கோரிக்கை வைக்கின்றனர் . இந்த செயல் மூலம் கஜா புயலால் மரங்களை இழந்த பகுதிகளில் மீண்டும் பசுமையை ஏற்படுத்த முடியும் என இளைஞர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu