நெல் விற்பனை: ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்

நெல் விற்பனை: ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்
X

தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காத்திருக்காமல் விற்பனை செய்யும் வகையில், ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்

தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி நெல் விற்பனை செய்ய ஆன்லைன் முன்பதிவு செய்யும் பணி தொடங்கியது.

மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் சாகுபடி செய்த நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், காத்திருப்பு இன்றி எளிதில் விற்பனை செய்யும் வகையில், ஆன்லைனில் முன்பதிவு செய்து விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன்படி, விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை www.tncsc.tn.gov.in & www.tncsc.edpc.in என்ற இணையத்தில் பதிவேற்றம் செய்து கொள்வதன் மூலம் எளிதில் விற்பனை செய்ய முடியும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

நடப்பு குருவை பருவத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் விற்பனை செய்ய 32 ஆயிரத்து 740 விவசாயிகள் இணையதளத்தின் மூலம் பதிவு செய்திருந்தனர். தற்போது 1 லட்சத்து 27 ஆயிரம் விவசாயிகள் 1.37.219 ஹெக்டேர் சம்பா தாளடி சாகுபடி செய்துள்ளனர். இதன் அறுவடை பணிகள் இந்த மாத இறுதியில் தொடங்க உள்ள நிலையில், விவசாயிகள் தங்களது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தேர்வு செய்து தேவையான பட்டா சிட்டா மற்றும் படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!