தஞ்சையில் தொடரும் கனமழை: ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

தொடர் கனமழையால் தஞ்சை மாவட்டம் காட்டூர், மடிகை, கக்கரை, அம்மாபேட்டை பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்து 66 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடைப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் அறுவடை பணிகள் முற்றிலுமாக நிறைவடைந்த நிலையில் மீதமுள்ள இடங்களிலும் அறுவடை செய்யப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், தஞ்சை மாவட்டம் மடிகை, காட்டூர், அம்மாபேட்டை, உக்கடை, புத்தூர், நடுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமாகி உள்ளது.

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், தற்போது அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே மழைநீரில் மூழ்கி சேதமான பயிர்களை கணக்கிட்டு, மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்