கொள்முதல் நிலையங்களில் காத்திருக்கும் நெல் மூட்டைகள்: 20 ஆயிரம் வரை இழப்பு

கொள்முதல் நிலையங்களில் காத்திருக்கும் நெல் மூட்டைகள்: 20 ஆயிரம் வரை இழப்பு
X

நெல் மணிகளுடன் விவசாயிகள்.

முளைத்து, கருக்காவாகி போன நெல்லால் ஏக்கருக்கு ரூ. 20,000 வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 3.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் 80 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், மீதி 20 சதவீதம் கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1.82 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்து உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம் மேலூர் கொள்முதல் நிலையத்தில், நெல்லை அறுவடை செய்து 20 நாட்களுக்கும் மேலாக காத்திருப்பதாகவும், அவ்வப்போது பெய்து வரும் தொடர் மழையால் நெல் மணிகள் அனைத்தும் முளைத்து, கருக்காவாகி போனதால் கொள்முதல் நிலைய அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஏக்கருக்கு 20,000 முதல் 30,000 வரை செலவு செய்து அறுவடை செய்யப்பட்ட நெல்லை தமிழக அரசே கொள்முதல் செய்யவில்லை என்றால், தற்கொலை செய்வதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். ஒரு நாளைக்கு நெல்லை காய வைப்பது, ஆட்கூலி என கூடுதலாக 2 ஆயிரம் வரை செலவு ஏற்படுவதாகவும் இதனால் தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிதத்தனர்.

தீபாவளி பண்டிகையை கூட மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாமல், நெல் கொள்முதல் நிலையங்களில் காவல் காக்க கூடிய சூழல் இருந்ததாகவும் கூறுகின்றனர். எனவே தேங்கி உள்ள நெல் மூட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், ஒரு நாளைக்கு ஆயிரம் முட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும், நடமாடும் நெல்கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா