ஒரத்தநாடு பேரூராட்சி தலைவராக அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் மா.சேகர் தேர்வு

ஒரத்தநாடு பேரூராட்சி தலைவராக அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் மா.சேகர் தேர்வு
X

ஒரத்தநாடு பேரூராட்சி தலைவராக மா. சேகர் பொறுப்பேற்றார்.

ஒரத்தநாடு பேரூராட்சி தலைவராக அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் மா.சேகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 9-வார்டு உறுப்பினர்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரும், 3 வார்டுகளை அ.தி.மு.க.வினரும், 3 வார்டு உறுப்பினர் தி.மு.க.வினரும் கைப்பற்றினர். இதனையடுத்து வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கடந்த 2ஆம் தேதி ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர். இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் தஞ்சை தெற்கு மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் மா.சேகர் பேரூராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!