ஒரத்தநாடு அருகே டூ வீலர் நேருக்குநேர் மோதல்: வாலிபர் உயிரிழப்பு

ஒரத்தநாடு அருகே டூ வீலர் நேருக்குநேர் மோதல்: வாலிபர் உயிரிழப்பு
X

விபத்தில் பலியான நவீன்

ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு பகுதியில், டூவீலர்கள் மோதிக்கொண்ட விபத்தில், ஒருவர் உயிரிழந்தார்.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மகன் நவீன் 24. வீட்டில் இருந்து அருகே உள்ள கடைக்கு, இருசக்கர வாகனத்தில் பொருட்கள் வாங்கி கொண்டு திரும்பிக் கொண்டிருந்தர்.

அப்போது, தென்னமநாடு மாரியம்மன் கோவில் பகுதியில், எதிர்ப்புறம் வந்த மற்றொரு இருசக்கர வாகனம், நவீன் வாகனம் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இருவரையும் மீட்டு உடனே தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நவீன் இறந்தார்.

இதுகுறித்து, ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் படுகாயமடைந்த தேவேந்திரன் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது