விவசாயிகளுக்கு புது செயலி; அசத்தும் ஒரத்தநாடு இளைஞர்
புதிய செயலியை மின் மோட்டாரில் இணைக்கும் சோமு.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அடுத்த ஒக்கநாடு கீழையூரை பகுதியை சேர்ந்தவர் சோமு. இவரது மகன் அரவிந்த் பொறியியல் பட்டதாரி. தற்போது சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
தனது தந்தை விளை நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக நள்ளிரவு என நேரம் காலம் பார்க்காமல் விளைநிலத்திற்கு சென்று வந்துள்ளார். மேலும் மின்சாரம் எப்போது வரும், எப்பொழுது தடைப்படும் என தெரியாத நிலையில் வயலிலேயே நீண்ட நேரம் காத்திருந்து மின்சாரம் வரும் போது அதனை இயக்குவதும் அதனை நிறுத்துவதும் என அதிக நேரத்தை வயலிலே செலவழித்துள்ளார்.
இரவு நேரங்களில் வயல்வெளிக்கு செல்லும் பொழுது பாம்பு உள்ளிட்ட விச ஜந்துக்கள் கடித்த உயிரிழப்புகளும் ஏற்படும் நிலை இருந்துள்ளது.
இந்நிலையில், தனது தந்தையின் வேலை பளுவை குறைக்கும் வகையில், செல்போன் மூலம் மின்மோட்டாரை இயக்குவதற்கும், அதேபோல இருமுனை மின்சாரம் இருக்கிறதா, இல்லை மும்முனை மின்சாரம் இருக்கிறதா என தெரிந்துகொள்ளும் வகையிலும் செயலியை உருவாக்கியுள்ளார்.
இந்த செயலியை பயன்படுத்தி விவசாயி வீட்டில் இருந்தபடியே மின்மோட்டரை இயக்குவது போல் வடிவமைத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu