குளிக்க சென்ற சிறுவன் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

குளிக்க சென்ற சிறுவன் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு
X
குருங்குளம் மேற்குதங்கப்ப உடையான்பட்டி யைச் சேர்ந்த சிறுவன் குளிக்கச்சென்ற போது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்

குளிப்பதற்காக இறங்கியபோது கால் தடுமாறி 35 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், குருங்குளம் மேற்கு தங்கப்ப உடையான்பட்டியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. விவசாயி. இவரது மகன் மகேஷ் (15). ஐடிஐ மாணவர். இவர் தனது வயலில் உள்ள கிணற்றில் குளிப்பதற்கு இறங்கியபோது கால் தடுமாறி கிணற்றில் விழுந்தார். நீச்சல் தெரியாததால் மகேஷ் நீரில் மூழ்கினார்.

அப்போது அப்பகுதியில் நின்றிருந்த மகேஷின் அம்மா இதனைப் பார்த்து அலறி துடித்தார். இதுகுறித்து தஞ்சாவூர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீரை வெளியேற்றிய பின்னர் மகேஷின் உடலை தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்து மீட்டனர். இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!