தஞ்சை மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையால் குளம் போல காட்சியளிக்கும் வயல்வெளிகள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த தொடர்மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கின்றன.
தஞ்சாவூர் மாவட்டத்தில், பெய்த தொடர்மழையால், ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளிப்பதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் 26ம் தேதி துவங்கிய நிலையில், டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில், நேற்று காலை முதல் இரவு வரை, அதிகபட்சமாக, பேராவூரணியில் 196 மி.மீ., ஈச்சன்விடுதியில் 172 மி.மீ.,தஞ்சாவூரில் 161 மி.மீ., பட்டுக்கோட்டையில் 153 மீ.மி., மதுக்கூரில் 145 மி.மீ.,மும், குறைந்தபட்சமாக கல்லணை அணைக்கட்டு பகுதியில் 63 மி.மீ., மழை பெய்ந்துள்ளது.
இதனால், தஞ்சாவூர் அடுத்த ரெட்டிப்பாளையம் முதலைமுத்து வாரியில், கரையை தாண்டி தண்ணீர் அதிகளவில் சென்றதால், ரெட்டிப்பாளையம், களிமேடு, சக்கரசாமந்தம் உள்ளிட்ட பகுதிகளில், வயல் வெளிகளில் தண்ணீர் புகுந்து வயல்வெளிகள் குளம் போல காட்சியளித்தது. இதனால் அப்பகுதியில் நடவு செய்யப்பட்டிருந்த, சுமார் 500 சம்பா பயிர்கள் தண்ணீர் முழ்கியது.
இதை போல, மதுக்கூர், அம்மாபேட்டை,பாபநாசம் ஆகிய பகுதிகளிலும் மழையால் வயல்களில் தண்ணீர் சூழ்ந்து ஆயிரக்கணக்கான சம்பா சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது. வடிக்கால் வசதிகள் முறையாக இல்லாததால் தான் வயல்களில் தண்ணீர் தேங்கியதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu