சிறுமி கடத்தப்பட்டதாக புகார்: வழக்குப்பதிந்து காவல்துறையினர் விசாரணை

சிறுமி கடத்தப்பட்டதாக புகார்: வழக்குப்பதிந்து  காவல்துறையினர் விசாரணை
X

பைல்படம்

சிறுமியை கடத்தி சென்றதாக ஒரத்தநாடு அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த வாலிபரை போலீசார் தேடி வருகிறனர்

சிறுமி கடத்தப்பட்டதாக, தந்தை கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வாலிபரைத் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, கருக்காடிபட்டி மேல தோப்பு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் மகள் கலையரசி (17). நேற்று இரவு, கலையரசி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். இதுகுறித்து கலையரசியின் தந்தை நாகராஜன் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கலையரசியை தேடி வந்தனர். இந்நிலையில் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்த முத்தமிழ் என்ற வாலிபர் கலையரசியை கடத்தி சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை ஒரத்தநாடு போலீசார் தேடி வருகிறனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!