தஞ்சையில் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி சட்ட நகல் எரிப்பு போராட்டம்

தஞ்சையில் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி சட்ட நகல் எரிப்பு போராட்டம்
X

தஞ்சையில் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாயிகள் சட்ட நகல் எரிப்பு போராட்டம் 

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, நாடு முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, தஞ்சாவூர், கும்பகோணம், ஒரத்தநாடு என 50க்கும் மேற்பட்ட இடங்களில் தடையை மீறி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டநகலை எரிக்க முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயற்ச்சித்தால் சிறு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மத்திய அரசு மூன்று சட்டங்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags

Next Story
ai marketing future