அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் விவசாயி உயிரிழப்பு

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் விவசாயி   உயிரிழப்பு
X

மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி ஜெயராமன்

குறுவை அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில், தாளடி சாகுபடிக்காக தனது வயல்வெளிகளை சரிசெய்யக்கூடிய பணியில் ஈடுபட்டு வந்தார்

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் விவசாயி உயிரிழந்த சம்பவம் குறித்து ஒரத்தநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அடுத்த தலையாமங்கலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜெயராமன்( 62.) இவர் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவரது வயலை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்து வருகிறார். தற்போது குறுவை அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில், தாளடி சாகுபடிக்காக தனது வயல்வெளிகளை சரிசெய்யக்கூடிய பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் 2 நாட்களாக இரவு நேரங்களில் காற்றுடன் கூடிய மழை கடந்த பெய்து வருகிறது. அவரது வயலில் தாழ்வாக சென்ற மின் கம்பி அறுந்து கிடந்தது தெரியாமல், மின் வயரை மிதித்ததால் விவசாயி ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக ஒரத்தநாடு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai and future cities