தஞ்சை:மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட 3 பதவி இடங்களிலும் தி.மு.க. வெற்றி

தஞ்சை:மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட  3 பதவி இடங்களிலும் தி.மு.க. வெற்றி
X

தஞ்சை மாவட்டத்தில் மூன்று பதவி இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர்கள் பழனிமாணிக்கம் எம்.பி. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. வுடன் உள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் உள்பட 3 பதவி இடங்களிலும் வெற்றி பெற்றது.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஒரு மாவட்ட கவுன்சிலர், 2 ஒன்றிய கவுன்சிலர் உள்பட 22 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று, வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் அம்மாபேட்டை மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட தி.மு.க.வேட்பாளர் ராதிகா கோபிநாத் 8,181 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைப்போல் கும்பகோணம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சசிகுமார் 189 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஒரத்தநாடு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் வெற்றிச்செல்வி 1,203 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தஞ்சை மாவட்ட இடைத்தேர்தலில் மூன்று பதவி இடங்களையும் தி.மு.க. கைப்பற்றி வெற்றி பெற்றது. அ.தி.மு.க, அ.மு.மு.க. படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் தி.மு.க வெற்றியை அடுத்து ஒரத்தநாடு அண்ணா சிலைக்கு தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் பழனிமாணிக்கம், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன் வெற்றிபெற்ற வேட்பாளர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்