ஒரத்தநாட்டில் திமுகவினர் வெடி வெடித்து கொண்டாட்டம்

ஒரத்தநாட்டில் திமுகவினர் வெடி வெடித்து கொண்டாட்டம்
X
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதையொட்டி ஒரத்தநாட்டில் திமுகவினர் வெடிவெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சி அமைக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

அவரை தொடர்ந்து 34 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். திமுக ஆட்சி அமைப்பதை கொண்டாடும் வகையில் ஒரத்தநாடு பெரியார் சிலை முன்பு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ராமச்சந்திரன் தலைமையில் திமுகவினர் அண்ணா சிலை மற்றும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்

Tags

Next Story