மாட்டுவண்டியில் சென்று திமுக வேட்பாளர் பிரச்சாரம்

மாட்டுவண்டியில் சென்று திமுக வேட்பாளர் பிரச்சாரம்
X

ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் இராமச்சந்திரன் தொகுதியில் மாட்டுவண்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் இராமச்சந்திரன் தொகுதிக்கு உட்பட்ட குருங்குளம் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள், தொழிலாளர்களிடம் மாட்டு வண்டியில் சென்று தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்.திமுக தேர்தல் அறிக்கையில் கரும்பிற்கு டன் ஒன்றுக்கு ரூபாய் 4000 அளிக்கப்படும் என்பதற்க்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்கவும், கரும்பு அரவை 5 சதவீதத்திற்கு பதிலாக 10 சதவீதம் பிடித்தம் செய்யும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று விவசாயிகளிடம் உறுதியளித்தார். தொடர்ந்து திருக்கானூர்பட்டியில் மாட்டு வண்டியில் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட இராமச்சந்திரனுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!