நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன் சங்கு ஊதி விவசாயிகள் போராட்டம்

நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன் சங்கு ஊதி விவசாயிகள் போராட்டம்
X

நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன் விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன் சங்கு ஊதி விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்.

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகில் அருந்தவபுரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது.

இங்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடந்தது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஆன்லைன் முறையால் விவசாயிகள் நெல்லை காலத்தோடு கொள்முதல் நிலையத்தில் போடமுடியமால், சர்வே பிரச்சினையின் காரணமாக விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் காத்துக்கிடக்கும் அவலம் ஏற்படுகிறது. உடன் அரசு ஆன்லைன் முறையை ரத்து செய்து காலதாமதமின்றி, பழைய நடை முறையிலேயே நெல்லை கொள்முதல் செய்ய கோரி சங்கு ஊதியும், நெல் மூட்டைக்கு மாலை கட்டிப் போட்டும், மணி அடித்தும் ,கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஒன்றிய செயலாளர் எம். வெங்கடேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வடக்கு மாவட்ட செயலாளர் சாமு.தர்மராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!