கல்லூரி மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்: 9 பேர் மருத்துவமனையில் அனுமதி

கல்லூரி மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்: 9 பேர் மருத்துவமனையில் அனுமதி
X

ஒரத்தநாடு அரசு கல்லூரி மாணவிகள் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் 9 பேர் வாந்தி, மயக்கம். ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் அனுமதி.

ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் 9 பேர் வாந்தி, மயக்கம். ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் அனுமதி.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் 70க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை மாணவி விடுதியில் உணவு அருந்திய மாணவிகள் 9 பேருக்கு உணவு சாப்பிட்டது ஒத்துக்கொள்ளாமல் திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக அங்கிருந்த மாணவிகள் ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story