தஞ்சையில் முதல்வர் ஆவேசம்

தஞ்சை மாவட்டத்தில் இன்று பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சாவூர் தொகுதிகளில் அதிமுக மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர், தூர்வாரும் பணிகள் மூலம் அனைத்து ஏரிகளும் நிரம்பி உள்ளதாகவும், கல்லணை கால்வாய் சீரமைப்பு தொடங்கப்பட்டது, பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாமல் கடைமடை வரை செல்வதற்கான அனைத்து வேலைகளும் நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே தமிழகம் தான் அதிக விவசாயிகள் பயன் அடைந்துள்ளார்கள் எனவும், மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தது திமுக, விவசாயிகளை காக்க தனி சட்டம் இயற்றப்பட்டு, இனி எந்த காலத்திலும் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம் எடுக்கப்படாது.
எப்போது எல்லாம் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களே, அப்போதெல்லாம் நிவாரணம் வழங்கிய அரசு அதிமுக அரசு என்றும், விவசாயிகளுக்கு உழவு மானியம் ஆகியவை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஸ்டாலின் தற்போது பித்தலாட்டம் செய்து வருவதாகவும், ஊர் ஊராக பெட்டி எடுத்துக் கொண்டு செல்கிறார், அதிலுள்ள குறைகளைத் தீர்ப்பதாக சொல்கிறார். ஆனால் அதை யார் நம்புவார்கள். ஒரு காலத்திலும் ஸ்டாலின் ஆட்சிக்கு வரப் போவதுமில்லை, பெட்டி பூட்டை உடைக்க போவதும் இல்லை என தெரிவித்த அவர். டெக்னாலஜி காலத்தில் விஞ்ஞான முறையில் மக்கள் தங்களது குறைகளை தெரிவித்து வரும் வேளையில், ஸ்டாலின் மனு வாங்கி பெட்டியில் போடுவது மக்களை ஏமாற்றும் செயல் என்றார். விவசாயி படும் துன்பத்தை உணர்வுபூர்வமாக நான் உணர்ந்தவன் என்றும், ஆனால் ஸ்டாலினோ பேன்ட் சட்டையைப் போட்டுக்கொண்டு விஞ்ஞான விவசாயம் செய்து வருவதாகவும், நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாராக இருப்பதாகவும் ஆனால் ஸ்டாலினிடம் பதிலே இல்லை என தெரிவித்த அவர், மடியில் கனமில்லை வழியில் பயம் இல்லை என தெரிவித்தார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu