வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 லட்சம் மதிப்புள்ள 500 நெல் மூட்டைகள் பறிமுதல்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 லட்சம் மதிப்புள்ள 500 நெல் மூட்டைகள் பறிமுதல்

 தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கருப்பட்டி பட்டி பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகளை பறிமுதல்செய்த அதிகாரிகள் 

வியாபாரிகளின் நெல்லை, கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த நான்கு லட்சம் மதிப்புள்ள 500 நெல் மூட்டைகள் பறிமுதல்.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை பணிகள் தொடங்கியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் வியாபாரிகளின் நெல்லை, கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏழுப்பட்டி பகுதியில் பூட்டிக் கிடந்த ரைஸ் மில்லில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான, 30 ஆயிரம் நெல் மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கருப்பட்டி பட்டி பகுதியில் ஒரு வீட்டில் உரிய ஆவணங்கள் இன்றி நெல் மூட்டைகள் இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்த போது, காமராஜ், ராதாகிருஷ்ணன் ஆகிய நெல் வியாபாரிகளின் வீட்டில் நெல் மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி இருந்த 4 லட்ச ரூபாய் மதிப்பிலான 500 நெல் மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தஞ்சை பிள்ளையார்பட்டியில் உள்ள சேமிப்பு கிடங்குகிற்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story