ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றிய அமமுக உறுப்பினர்கள் பதவியேற்பு

ஒரத்தநாடு  பேரூராட்சியை கைப்பற்றிய அமமுக உறுப்பினர்கள்  பதவியேற்பு
X

ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர்கள் பதவி ஏற்று கொண்டனர்

வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர்கள் பதவி ஏற்று கொண்டனர்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலில் ஒரத்தநாடு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 9-வார்டு உறுப்பினர்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரும், 3 வார்டுகளை அதிமுகவினரும், 3 வார்டு உறுப்பினர் திமுகவினரும் வெற்றி பெற்றனர். இதனையடுத்து வெற்றி பெற்ற உறுப்பினர்கள் ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர். வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் கடவுள் மீது ஆணையாக எனவும், திமுக உறுப்பினர்கள் கலைஞர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் மீது ஆணையாக என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!