மீண்டும் ஒரத்தநாட்டில் போட்டியிடும் வைத்திலிங்கம்

மீண்டும் ஒரத்தநாட்டில் போட்டியிடும் வைத்திலிங்கம்
X

ஒரத்தநாடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்

பெயர்: ஆர்.வைத்திலிங்கம். வயது 66

ஊர்: தெலுங்கன்குடிக்காடு

படிப்பு: பி.ஏ.

தொழில்: விவசாயம்

தந்தை பெயர்: ரங்கசாமி

மனைவி பெயர்: தங்கம்

மகன்கள்: ஆனந்த பிரபு, சண்முக பிரபு

மகள்: பிரதீபா

பதவி: இவர் அ.தி.மு.க.,வில் 1987ம் ஆண்டு ஒன்றிய துணை செயலாளர் பதவி வகித்தார்.

1996ல் ஒன்றிய கழக செயலாளர். 2001ம் ஆண்டு ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தொழில்துறை அமைச்சர், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

பின்னர், 2006 ல் மீண்டும் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாக ஆனார். 2011ல் வீட்டுவசதித் துறை அமைச்சர், 2016ல் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியைச் சந்தித்தார். 2016ல் ராஜய்சபா எம்.பி.,யாக பதவி வகித்து வருகிறார். தற்போது கட்சியில், தஞ்சை தெற்கு மாவட்ட கழக செயலாளர், தஞ்சை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர், தஞ்சாவூர், அரியலுார், பெரம்பலுார், திருச்சி, ஆகிய மாவட்டங்களுக்கான மண்டல பொறுப்பாளர், கழக துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவி வகித்து வருகிறார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!