மதுக்கூர் ஊராட்சியில் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் உரம் வழங்கும் நிகழ்ச்சி

மதுக்கூர் ஊராட்சியில்  விவசாயிகளுக்கு 100% மானியத்தில்  உரம் வழங்கும் நிகழ்ச்சி
X

Manures in 100 percent subsidy to farmers - விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் உரங்கள் வழங்கப்பட்டன

Manures in 100 percent subsidy to farmers - குறுவை சாகுபடி செய்து மேலுரம் இடும் நிலையில் உள்ள பயிர்கள் உள்ள விவசாயிகள் வேறுபாடின்றி பதிவு செய்து உரம் பெற்று பயன்பெறுமாறு வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டார்.

Manures in 100 percent subsidy to farmers - மதுக்கூர் வட்டாரத்தில் மதுக்கூர் வேளாண் உதவி அலுவலர் தொகுதிக்கு உட்பட்ட மதுக்கூர் வடக்கு மோகூர் அண்டமி காடந்தங்குடி விக்ரமம் மற்றும் வாடியகாடு கிராமங்களை சேர்ந்த உழவன் செயலியின் மூலம் ஆவணங்கள் பதிவு செய்த குறுவை விவசாயிகளின் விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 100% மானியத்தில் ரூபாய் 2466 க்கு ஒரு மூட்டை யூரியா ஒரு மூட்டை டி ஏ பி 25 கிலோ பொட்டாஸ் உரம் வழங்கும் நிகழ்ச்சி மதுக்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் திலகவதி கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு உரம் வழங்கும் ஆணையை வழங்கினார்.மதுக்கூர் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் வீரகுமார், வேளாண்மை உதவி அலுவலர் பூமிநாதன் ஆகியோர் விவசாயிக்கு உரத்தை வழங்கினர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலர்கள் மற்றும் ஆத்மா திட்ட அலுவலர் ராஜூ அய்யா மணி ஆகியோர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Manures in 100 percent subsidy to farmers - மதுக்கூர் அண்டமி மோகூர் காடந்தங்குடி பஞ்சாயத்தை சேர்ந்த விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து மேலுரம் இடும் நிலையில் உள்ள பயிர்கள் உள்ள விவசாயிகள் வேறுபாடின்றி பதிவு செய்து உரம் பெற்று பயன்பெறுமாறு வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் மற்றும் பவித்ரா செய்திருந்தனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா