பசு மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

பசு மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் விபத்தில் இளைஞர்  உயிரிழப்பு
X

 விபத்தில் பலியான கும்பகோணம் துக்காம்பாளை பகுதியை சேர்ந்த மணிகண்டன்

சாலையின் நடுவே பசு மாடு அமர்ந்திருப்பதை கவனிக்காத மணிகண்டன், வேகமாக மாட்டின் மீது இருசக்கர வாகனத்தை மோதியுள்ளார்

சாலையின் நடுவே அமர்ந்திருந்த பசுமாட்டின் மீது, இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் துக்காம்பாளை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (32). இவர் தனியார் இருசக்கர நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு கும்பகோணம் செல்வம் தியேட்டர் வழியாக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலையின் நடுவே பசு மாடு அமர்ந்திருப்பதை கவனிக்காத மணிகண்டன், வேகமாக மாட்டின் மீது இருசக்கர வாகனத்தை மோதியுள்ளார். இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த மணிகண்டன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல்நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உடலை கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மணிகண்டனுக்கு திருமணமாகி, மனைவி குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!