சுவாமிமலை அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

சுவாமிமலை அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
X

சுவாமிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஆசூர் பைபாஸ் ரோட்டில் உள்ள தேவர் சிலைக்கு முன்பு சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆசூர் மெயின் ரோடு ரமேஷ் குமார் மகன் சிவப்பிரகாசம் (23). நேற்று சுவாமிமலை அருகே ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இரவு 10 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது, தேவர் சிலை முன்பு உள்ள சாலை விரிவாக்கப் பணி நடைபெறும் இடத்தில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் சென்றபொழுது பாபநாசம் அருகே பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பந்தமாக சுவாமிமலை காவல்துறை ஆய்வாளர் மகாலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சிவப்பிரகாசத்தின் உடலை கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வைத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!