திருநாகேஸ்வரம் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு யாகசாலை பூஜை

திருநாகேஸ்வரம் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு யாகசாலை பூஜை
X
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு நான்காம் காலம் மற்றும் ஐந்தாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு நான்காம் காலம் மற்றும் ஐந்தாம் கால யாகசாலை பூஜை சிறப்பாக நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் நாகநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் நவக்கிரக கோயில்களில் ஒன்றாகும். ராகு பகவான் தனது இரு மனைவிகளோடு இத்தலத்தில் அருள்பாலித்து வருகிறார். இக்கோயில் ராகு பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.

மேலும், ராகு கால பூஜையின் போது ரகுபகவானின் சிலைக்கு பாலபிஷேகம் செய்யும் போது, அந்த பால் நீலநிறமாக மாறி வருவது இன்றளவும் காணப்படுகிறது.

இக்கோயில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதையடுத்து தற்போது ரூ.5 கோடி செலவில் கோயில் திருப்பணிகள் நடைபெற்றுள்ள நிலையில், நாளை 24-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.

இதையொட்டி குடமுழுக்கு விழா நேற்றுமுன்தினம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மகாலட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜையும் நடைபெற்றது.

தொடர்ந்து (21-ம் தேதி) மாலை முதலாம் கால யாகசாலை பூஜையும், மகா தீபாரதனையும், நேற்று 22-ம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று 4 மற்றும் 5 ம் கால யாகசாலை பூஜையும், மகா பூர்ணாஹூதி, தீபாராதனையும் நடைபெற்றது. இதனையடுத்து நாளை 24-ம் தேதி காலை 5 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து திருக்கடங்கள் புறப்பட்டு காலை 7 மணிக்கு அனைத்து பரிவார தெய்வ விமானங்களுக்கு குடமுழுக்கும், தொடர்ந்து காலை 10.30 மணிக்கு ராஜகோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. பின்னர் மகாதீபாரதனை நடைபெறவுள்ளது. இந்த குடமுழுக்கு விழாவில் ஆதீனங்கள், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஆட்சியாளர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளதாக கோயில் தக்கார் இளையராஜா, உதவி ஆணையர் நித்யா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்