சுவாமிமலை அருகே நாகக்குடி கிராமத்தில் உலக மண் வள தினம் முகாம்
சுவாமிமலை அருகே நாககுடி கிராமத்தில் உலக மண் வள தினம் முகாம் நடைபெற்றது.
சுவாமிமலை அருகே நாககுடி கிராமத்தில் உலக மண் வள தினம் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நாககுடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். கும்பகோணம் வேளாண்மை உதவி இயக்குனர் விஜயலட்சுமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசுகையில், மண்ணிற்கு தேவையான பற்றாக்குறையால் பயிர்களில் ஏற்படும் குறைபாடுகள் பற்றியும், குறைபாடுகளை நிவர்த்தி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும், மண்ணில் கார அமிலத்தன்மை பற்றியும், அதன் நிவர்த்தி செய்வது பற்றி கூறினார்.
அதனை தொடர்ந்து துணை வேளாண்மை அலுவலர் சாரதி கலந்து கொண்டு பேசுகையில், மண் வளத்தை மேம்படுத்த பசுந்தாள் உரப் பயிர்கள் சாகுபடி செய்வது பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், ரசாயன உரங்கள் செலவை குறைத்து அதிக மகசூல் எடுப்பது பற்றி கூறினார்.
நுண்ணீர் பாசனம் பசுமைப் போர்வை திட்டத்தில் இலவசமாக மரக்கன்றுகள் வாங்கி விவசாயிகள் நடவு செய்ய வேண்டும். அதனால் மண் வளம் பெறுவது, மழை பொழிவது, சுற்றுப்புறச்சூழலை பாதுகாப்பது பற்றி கூறினார். முகாமில் உதவி வேளாண்மை அலுவலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu