சோழபுரத்தில் கணவனுடன் கருத்து வேறுபாடு: மனைவி தூக்கிட்டு தற்கொலை

சோழபுரத்தில் கணவனுடன்  கருத்து வேறுபாடு: மனைவி தூக்கிட்டு தற்கொலை
X

சோனாலி 

சோழபுரத்தில் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரம் சின்ன அக்ரஹாரம் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் வசிப்பவர் சக்திதாஸ் மனைவி மாலியா என்கிற சோனாலி (23). இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இவருக்கும் இவரது கணவர் சக்திக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக சோழபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில், தனது தாய் வீட்டில் சோனாலி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்த சோழபுரம் காவல் துறையினர் சோனாலியின் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தற்கொலை சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!