சுவாமிமலை அருகே கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

சுவாமிமலை அருகே கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு
X
சுவாமிமலை அருகே கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சுவாமிமலை அருகே உள்ள நீலத்தநல்லூர் ஊராட்சி, மேல ஆத்துக்குறிச்சி கொள்ளிடம் ஆற்றங்கரையில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடப்பதை, அவ்வழியே சென்ற பொதுமக்கள் கண்டனர். இது குறித்து, கிராம நிர்வாக அலுவலர் ரவி கண்ணனிடம் புகார் செய்தனர்.

கிராம நிர்வாக அலுவலர் ரவி கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மஹாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்து கிடந்த பெண் யார்? அவர் ஏன் இறந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மர்ம நபர்கள் யாராவது கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!