கும்பகோணம் அருகே மேய்ச்சலுக்குச் சென்ற மாட்டின் காலை வெட்டிய நபர் யார்?

கும்பகோணம் அருகே மேய்ச்சலுக்குச் சென்ற மாட்டின் காலை வெட்டிய  நபர் யார்?
X
கால் வெட்டப்பட்ட பசுமாடு.
கும்பகோணம் அருகே மேய்ச்சலுக்குச் சென்ற மாட்டின் காலை வெட்டிய மர்ம நபர் யார் என்று போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

கும்பகோணம் அருகே உள்ள பழவத்தான்கட்டளை ஊராட்சி கிளாரட் நகர் இலுப்பைத் தோப்பு பகுதியில் வசிப்பவர் மகேஸ்வரி பரமசிவம். இவர் மாடு வளர்த்து வருகிறார். இவர் வழக்கம்போல் மாட்டை மேய்ச்சலுக்கு அவிழ்த்து விட்டிருக்கிறார். மேயச் சென்ற மாடு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதைத் தேடிச் சென்றபோது அது காலில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த போது தங்களுக்கு தெரியாது என்று பலரும் கூறியதால் பசு மாட்டின் காலை வெட்டிய மர்ம நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!